Tuesday, June 21, 2011

காட்டு அணில் மற்றும் குரங்குகளின் தொல்லை


அம்பாறை தமன பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் காட்டு அணில் மற்றும் குரங்குகளின் தொல்லையினால் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் பலவிதமான அசௌகரியங்களை அனுபவித்து வருகின்றனர்.
மலயாய மற்றும் கல்ஓயா தேசிய வனப்பகுதியிலுள்ள நெல்லிக்காட்டிலிருந்து கூட்டம் கூட்டமாக கிராமத்திற்குள்  நுளையும் காட்டு அணிலும் குரங்குகளும் பயிரிடப்பட்டுள்ள காய்கறிகள் மற்றும் பழ மரங்களுக்கு  பெருத்த சேதத்தை விளைவிப்பதுடன் வீடுகளுக்கு மேலாக பாய்ந்து செல்வதால் வீட்டின் ஓடுகளும் சேதமாக்கப்பட்டுள்ளன.
கிராமப்புறங்களுக்குள் கூட்டமாக  வரும் குரங்குகள் திறந்துள்ள வீடுகளுக்குள் நுளைந்து சமையலறையிலுள்ள உணவுப்பொருட்களை உண்டு நாசப்படுத்துகின்றன.
தமன பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட ஹிங்குரான , நெலகம்புற , ஹுனுகொட்டுவ , பாசலபெதச , சமகிபுர  மற்றும் கரலேவ போன்ற கிராமங்களில் ” திவி நெகும”  திட்டத்தின் கீழ் பயிர் செய்யப்பட்டுள்ள கொய்யா மற்றும் மா போன்ற பழ மரங்களின் பிஞ்சுகளை கடித்து சேதப்படுத்துவதால் விவசாயிகள் தமது விவசாய முயற்சியினை தொடர முடியாமல் உள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காட்டு அணில்களையும் குரங்குகளையும் அருகிலுள்ள காட்டு பகுதியிலிருந்து வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச மக்கள் கேட்டுள்ளனர்.

No comments:

Post a Comment