Tuesday, June 21, 2011

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் நடவடிக்கை.


கிழக்கு மாகாணத்திலுள்ள சகல இலங்கை போக்குவரத்து சபை சாலைகளுக்கும்  கணணி வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை , திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள இ . போ . சபைக்கு சொந்தமான சாலைகளில் கணணி வசதியில்லாத காரணத்தினால் நிர்வாகத்தினை சீராக கொண்டு செல்வதில் பலவிதமான சிக்கல்கள் நிலவி வருவதாக சாலைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் கிழக்கு மாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததனை தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

No comments:

Post a Comment