Saturday, June 25, 2011

சட்ட விரோதமான முறையில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறியொன்றினை மகாஓயா பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சட்ட விரோதமான முறையில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறியொன்றினை மகாஓயா பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.மகாஓயா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மாஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.எச்.எம்.என். ஜயபதிரனவின் பணிப்புரையின் பேரில் கட்டாக்காலியாக திரியும் மர்டுகளைப் பிடித்து கட்டிவைத்திருந்து பதுளை மற்றும் நுவரெலியா பிரதேசங்களுக்கு கடத்தி செல்லும் வழியிலேயே இந்த லொறி பொலிஸாரால் நிறுத்தப்பட்டு சோதைனை இடப்பட்ட போது 20 மாடுகள் மிகவும் நெருக்கமான முறையில் லொறியில் காணப்பட்டதாக மகாஓயா பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகத்தின் பேரில் லொறிச்சாரதியும் உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மாடுகள் பொலிஸ் நிலைய வளவில் கட்டியும் வைக்கப்பட்டுள்ளதுடன் லொறியும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.இவ்விடயம் சம்பந்தமாக மகாஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment