Sunday, June 26, 2011

வாகரைப் பிரதேச செயலாளர் செல்வி ஆர் . ராகுலநாயகியின் ஏற்பாட்டில் இயற்கை விவசாயம்.


இரசாயன வளமாக்கிகளை  பயன்படுத்தாமலும்  பீடைகொல்லிகளைப் பாவிக்காமலும் பாரம்பரிய இயற்கை விவசாயத்தை  மேற்கொண்டு  இயற்கையோடு இணைந்து சூழலை மாசடைய செய்யாதவாறு நச்சுகள் அற்ற மரக்கறிகளை உற்பத்தி செய்து ஆரோக்கியமாக வாழ்வதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் வாகரைப் பிரதேச செயலக வளாகத்தினுள்  பிரதேச மக்களுக்கு விவசாய செய்கையின் முக்கியத்துவம் பற்றி செய்முறை விளக்கமளிக்கும் வகையில்  முன்மாதிரிப் பயிர்ச் செய்கை  தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வாகரைப் பிரதேச செயலாளர் செல்வி ஆர் . ராகுலநாயகியின் ஏற்பாட்டில்   பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நிலத்தை பண்படுத்தி பயிர்கள் நட்டு, தோட்ட வேலைகளில் ஓய்வு நேரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



No comments:

Post a Comment