Saturday, June 11, 2011

பின்தங்கிய கிராமங்களிலுள்ள வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கென பெரும்தொகையான நிதியினை ஒதுக்கியுள்ளதாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தியமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை தெரிவித்தார்.


கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை , திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு  ஆகிய மூன்று மாவட்டங்களிலுள்ள பின்தங்கிய கிராமங்களிலுள்ள வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கென  ஆசிய அபிவிருத்தி வங்கி , ஜப்பான் அரசு மற்றும் உலக வங்கி ஆகியன பெரும்தொகையான நிதியினை ஒதுக்கியுள்ளதாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தியமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை தெரிவித்தார்.
கடந்த கால யுத்த சூழ்நிலை மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இதுவரை காலமும் அபிவிருத்தி செய்யப்படாமலிருந்த கிழக்கு மாகாணத்திலுள்ள பல வீதிகள் தற்போது பாரிய அபிவிருத்தி கண்டு வருகின்றது.
மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் அடிப்படையில்  நாட்டின் பின் தங்கிய பிரதுசங்களிலுள்ள மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.
இந்த வீதி அபிவிருத்திக்கென ஆசிய அபிவிருத்தி வங்கி 3,808  மில்லியன் ரூபாவினையும், ஜப்பான் அரசு  4,500 மில்லியன் ரூபாவினையும்  உலக வங்கி  2,204 மில்லியன் ரூபாய்களையும் உதவியாக வழங்கியுள்ளனகிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்ட பின்னர் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பணிப்புரையின் பேரில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. இதன்படி கிழக்கு மாகாணத்திலுள்ள அதிகமான வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலமையில் சில வீதிகளின் புனரமைப்பு பணிகள் முடியும் தறுவாயிலும் உள்ளதாக கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment