Saturday, June 25, 2011

மஹியங்கன பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அயற்கிராமங்களில் காட்டு யானைகளின் தொல்லை.


மஹியங்கன பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அயற்கிராமங்களில் ஏற்பட்டுள்ள காட்டு யானைகளின் தொல்லையினால் பிரதேச வாசிகள் இரவு வேளைகளில் இடம்பெயர்ந்து வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இரவு வேளையில் அயலிலுள்ள காடுகளிலிருந்து கூட்டம் கூட்டமாக வரும் காட்டு யானைகள் கடுகுடாவ , தம்பராவ ,பஹலோவேகம மற்றும் 20 ஆம் கட்டை போன்ற இடங்களில் பயிர்களை நாசம் பண்ணுவதுடன் குடியிருப்புகளுக்கும் சேதத்தை உண்டு பண்ணுகின்றன. யானைகளின் தொல்லையினால் இரவு முழுவதும் தீப்பந்தங்களுடன் விழித்திருக்க வேண்டிய நிலையொன்று இக்கிராம மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
மஹியங்கன பிரதேசத்திற்கு ரன்தெனிகல  மற்றும் மாதுருஓயா போன்ற காட்டுப்பிரதேசங்களில் இருந்து வரும் யானைகளினாலேயே தொடர்சியான இந்த தொல்லை ஏற்பட்டு வருவதாக கிராமவாசியொருவர் தெரிவித்தார்.
காட்டு யானைகளின் தொல்லையிலிருந்து தமக்கு பாதுகாப்பு வழங்குமாறு கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுள்ளனர்.

No comments:

Post a Comment