Wednesday, June 22, 2011

கஞ்சாவை உடம்பில் கட்டிக் கொண்டு கடத்திச்செல்ல முற்பட்ட ஒருவரை அம்பாறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


நூதனமான முறையில் கஞ்சாவை உடம்பில் கட்டிக் கொண்டு அம்பாறையிலிருந்து கொழும்புக்குக் கடத்திச்செல்ல முற்பட்ட ஒருவரை அம்பாறை பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

போதைப் பொருள் தடுப்பு பிரிவின் புலனாய்வாளர்களிடமிருந்து அம்பாறை பொலிசாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றையடுத்தே பிரஸ்தாப நபர் உடம்பில் மறைத்து வைக்கப்பட்ட கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்


அவரிடமிருந்து மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கடத்தி செல்லப்படவிருந்த  இரண்டு கிலோ எண்ணூறு கிராம் எடை கொண்ட கஞ்சாவும், அம்பாறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அவரது உடலின் வயிற்றுப் பகுதியில் சுமாராக ஒன்றரைக் கிலோ கஞ்சாவும், ஏனைய பகுதிகளில் எஞ்சிய கஞ்சாவும் பொதிசெய்யப்பட்ட நிலையில் சூட்சுமமாக உடம்புடன் சோ்த்துக் கட்டப்பட்டிருந்ததை சந்தேக நபரை  சோதனையிட்ட பொலிசார் கண்டறிந்துள்ளனர்.

கொழும்பில் விற்பனை செய்வதற்காகவே கஞ்சாவை கடத்திச் செல்ல முற்பட்டதாக அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. தற்போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அம்பாறை பொலிஸார் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment