37 வது தேசிய விளையாட்டு விழாவினை முன்னிட்டு கிழக்கு மாகாண விளையாட்டு அமைச்சின் அனுசரணையில் கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட கிறிக்கட் சுற்றுப்போட்டியில் அம்பாறை மாவட்ட கிறிக்கட் அணி இவ்வருட கிழக்கு மாகாண சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் திருகோணமலை மாவட்ட அணிக்கும் அம்பாறை மாவட்ட அணிக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அம்பாறை மாவட்ட அணி 15 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 99 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய திருகோணமலை மாவட்ட அணி 15 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுக்களை இழந்து 97 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டனர். இதனால் இரண்டு ஓட்டங்களினால் அம்பாறை மாவட்ட அணி சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டது.
அரை இறுதிப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணியை எதிர்த்தாடிய அம்பாறை மாவட்ட அணி 5 விக்கட்டுக்களனால் வெற்றி பெற்றிருந்தது.
இறுதி நாள் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் , நிகழ்ச்சித்திட்ட உத்தியோஸ்தர் எம்.சீ.எம்.அத்தீக் , அம்பாறை மாவட்ட விளையாட்டு அதிகாரி எம்.ஐ.எம்.அமீர்அலி ஆகியோர் கலந்து கொண்டதுடன் போட்டிக்கான சகல ஏற்பாடுகளையும் கல்முனை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோஸ்தர் ஏ.எம்.எம்.றஸீன் மேற்கொண்டிருந்தார்.
No comments:
Post a Comment