யால தேசிய வன பகுதியில் வசித்து வந்த இரண்டு மான்களை கொன்று அதன் இறைச்சியை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ஐவரை திஸ்ஸமஹராம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யால வன இலாகா அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தேகத்தின் பேரில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களை வன இலாகா அதிகாரிகள் திடீரென சோதனையிட்ட போது அவர்கள் மான் இறைச்சியை மறைத்து வைத்திருந்தமை தெரியவந்த்து.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் திஸ்ஸமஹராம நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதுடன் கைப்பற்றப்பட்ட மானிறைச்சியும் வன இலாகா அதிகாரிகளினால் ஒப்படைக்கப்பட்டன.
இவ்விடயம் சம்பந்தமான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹராம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment