Tuesday, June 21, 2011

சிறு கைத்தொழில் மற்றும் குடிசைக் கைத்தொழிலாளர்களின் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சி.


கிழக்கு மாகாணத்திலுள்ள சிறு கைத்தொழில் மற்றும் குடிசைக் கைத்தொழிலாளர்களின் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியொன்று ஜுலை மாதம் 7 ,8 , 9 ஆம் திகதிகளில் திருகோணமலையில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை கிழக்கு மாகாண சிறுகைத்தொழில் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.
கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை , திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள சிறு கைத்தொழிலாளர்கள் மற்றும் குடிசைக் கைத்தொழிலாளர்களிடையே மேலும் ஊக்கத்தினை ஏற்படுத்தவும் உற்பத்திப் பொருட்களுக்கு சிறந்த சந்தை வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் அவர்களின் பொருளாதார வசதியினை மேம்படுத்துவதே இக்கண்காட்சியின் பிரதான நோக்கமாகும்.
இக்கண்காட்சி சம்பந்தமான மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ளவிரும்பும் கைதொழில் முயற்சியாளர்கள் அம்பாறையில் அமைந்துள்ள சிறு கைத்தொழில் திணைக்கள காரியாலயத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment