Tuesday, June 21, 2011

இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் கீழ் அம்பாறை மாவட்ட பிரதேச செயலகப்பிரிவுகளில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் கீழ் அம்பாறை மாவட்ட பிரதேச செயலகப்பிரிவுகளில் இயங்கி வருகின்ற தொழில் பயிற்சி நிலையங்களில் பயிற்சி நெறிகளை தொடர்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தகவல் தொழில் நுட்பத்தில் தேசிய சான்றிதழ் , மின்னிணைப்பு , நீர்க்குழாய் பொருத்துதல் , மோட்டார் வைன்டிங் , மர கைவினைஞர் , நிர்மான கைவினைஞர் , அலுமினியம் பொருத்துனர் , ஒட்டுனர் , வாகன இயந்திர திருத்துனர் , சாரதி பயிற்சி , அதிவேக தையல் இயந்திரம் இயக்குனர் , தையல் , தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர்,  கணனி வரைபட வடிவமைப்பாளர் , கணனி வன் பொருள் தொழில் நுட்பவியலாளர் , உணவு விடுதி , வீட்டு பராமரிப்பாளர் , சமையற் கார்ர  போன்ற பயிற்சி நெறிகளுக்கு  பாடசாலையை விட்டு விலகிய மற்றும் வேலை வாய்ப்பு இல்லாதிருக்கும் தரம் 9 தொடக்கம் க.பொ.த. சாதாரண தரம் வரை கல்வி கற்ற இளைஞர்களும் யுவதிகளும் தான் விரும்பும் கற்கைநெறியினை குறிப்பிட்டு விண்ணப்படிவத்தினை புர்த்தி செய்து ஜுலை மாதம் 10 ஆம் திகதிக்கு முன் தொழல் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை உத்தியோஸ்தர் , மாவட்ட தொழில் பயிற்சி நிலையம் , நிந்தவுர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு தொழில் வழிகாட்டல் உத்தியோஸ்தர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment