Sunday, June 12, 2011

கிழக்கு மாகாண இளைஞர்களுக்கான பயிற்சி முகாமொன்று இளைஞர் விவகாரம் மற்றும் திறன் விருத்தி அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் அண்மையில் தம்புள்ள சுவிஸ் இளைஞர் பயிற்சி நிலையத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.


கிழக்கு மாகாண இளைஞர்களுக்கான  பயிற்சி  முகாமொன்று  இளைஞர் விவகாரம் மற்றும் திறன் விருத்தி அமைச்சு  மற்றும்  தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் அண்மையில் தம்புள்ள சுவிஸ் இளைஞர் பயிற்சி நிலையத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை , மட்டக்களப்பு  மற்றும்  அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த மூவின இளைஞர்களையும்  பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த வதிவிட பயிற்சி முகாமில் 75  இளைஞர்கள் கலந்து கொண்டனர்.இச் செயலமர்வின் போது இளைஞர்களுக்கு  தலைமைத்துவம் , ஆளுமை  ,  அபிவிருத்தி ,சமூகமட்டத்தில் ஏற்படும் சவால்களை வெற்றி கொள்ளும் செயல் திட்டங்கள் , திட்டமிடல் போன்றவற்றை  நடைமுறைப்படுத்துதல் சம்பந்தமான பயிற்சிகள் வழங்கப்பட்டன
அம்பாறை மாவட்ட அணிக்கு சாய்ந்தமருது பிரதேச செயலக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஜி.அன்வர் தலைமை தாங்கினார்.







No comments:

Post a Comment