Sunday, June 5, 2011

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்​ற உறுப்பினர் பல்கலைக்கழ​க மாணவர்களுக்​கு உதவினார்


தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மூவின மாணவர்களுக்கும் ஆங்கில மொழியில் பேச்சுத்திறனை அதிகரிக்கும் நோக்கில் இப்பயிற்சி நெறிக்கான முழுத்தொகையையும் வழங்க திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைஸால் காசிம் முன்வந்துள்ளார் .

ஐ.ஐ.பி.எம் நிறுவனம் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள  மாணவர்களின் ஆங்கில பேச்சிப்பயிற்சியினை அதிகரிக்கும் நோக்கில் மூன்று மாத பயிற்சி நெறி ஒன்றினை ஆரம்பித்துள்ளது. இப்பயிற்சி நெறிக்கென ஒரு மாணவரிடம் இருந்து 31,212 ரூபா அறவிடப்படுகின்றது.  இந்த அடிப்படையில் சுமார் 75 மாணவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பைஸால் காசிமினால் செலுத்தப்பட்ட பணத்திற்கான பற்றுச் சீட்டுக்களை  வழங்கும் வைபவம்  கல்முனை ஸாஹிறா தேசியக்கலலூரியின் எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

சாய்ந்தமருது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஸஹ்பி எச் இஸ்மாயீல் தலைமையில் இடம் பெற்ற மேற்படி நிகழ்வில் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் பைஸால் காசிம் பிரதம அதிதியாகவும் ஐ.ஐ.பி.எம். நிறுவனத்தின் பிரதி பொது முகாமையாளர் றிப்தி முஹம்மட் கௌரவ அதிதியாகவும்  நிந்தவுர் பிரதேச சபையின் உதவி தவிசாளர் எம்.அன்ஸார்   கல்முனை ஸாஹிறா தேசியக்கல்லூரி அதிபர் எம்.எம்.இஸ்மாயில் ஆகியோர்   விஷேட   அதிதியாகவும்  கலந்து  கொண்டனர்.









No comments:

Post a Comment