Sunday, June 12, 2011

கல்முனை பிரதேசத்திலுள்ள ஆறு , குளம் மற்றும் நீரோடைகளில் வளர்ந்து காணப்படும் ஆற்றுவாழை ( நீர்க்களை) களினால் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுவோரும் பொது மக்களும் விவசாயிகளும் பல விதமான கஸ்டங்களை எதிர் நோக்கி வந்தனர்.


கல்முனை பிரதேசத்திலுள்ள ஆறு குளம் மற்றும் நீரோடைகளில் வளர்ந்து காணப்படும் ஆற்றுவாழை        ( நீர்க்களை) களினால் நன்னீர் மீன்பிடியில்  ஈடுபடுவோரும்  பொது மக்களும் விவசாயிகளும் பல விதமான கஸ்டங்களை எதிர் நோக்கி வந்தனர்.

நன்னீர்  மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் ஒன்றிணைந்து கல்முனை இறைவெளிக்கண்ட ஆற்றில் வளர்ந்து காணப்பட்ட  ஜப்பான் ஜபறு            ( ஐக்கோணியா) நீர்க்களைகளை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.நீர் நிலைகளில் நீர்க்களைகள் வளர்ந்து காணப்பட்டதால் அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது  ஆற்றில் பெருக்கெடுத்த நீர் ஓட முடியாமல் பாலம் மற்றும் நீரோடைகளை அடைத்ததனால்  வெள்ளநீர் ஊருக்குள் நுழைய ஆரம்பித்ததது. இதனால் ஆற்றுக்கு அருகில் வசித்து வந்த மக்களும் பெரும் போக வேளாண்மை செய்கையில் ஈடுபடட விவசாயிகளும் பல விதமான கஷ்டங்களை அனுபவித்தததுடன் அவர்களினது உடமைகளும்  பலத்த சேதத்திற்கு உட்படுத்தப்பட்டது.நீர்க்களைகளின் பெருக்கம் காரணமாக நுளம்புகளின் பெருக்கமும் விசப்பாம்புகளின் தொல்லைகளும் இப்பிதேசத்தில் அதிகரித்து காணப்பட்டது.இவ்வாறான முயற்சியில் ஈடுபட்டு வரும் நன்னீர் மீன்பிடிப்பாளர்களுக்கு  பிரதேச மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.


No comments:

Post a Comment