Saturday, June 25, 2011

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்பபுணர்வு ஊர்வலம்.


தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு  சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட சாய்ந்நதமருது ஜீ.எம்.எம்.எஸ் வித்தியாலயத்தில் விழிப்பபுணர்வு ஊர்வலமொன்று  சனிக்கிழமை   நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எம்.ஐ.ஏ.கரீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரிகாரியாலயத்தின் பதில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் முஸ்தபா எம் பைஸல் ,  சுகாதாரக் கழக பொறுப்பாசிரியர் ஏ.சஹருன் மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் பதாதைகளை ஏந்திய வண்ணம் பாடசாலை வளாகத்தினுள்ளும் வீதிகளிலும் விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டதுடன் பொதுமக்களுக்கு நுளம்பு ஒழிப்பு சம்பந்தமான துண்டு பிரசுரங்களையும் வினியோகித்தனர்.








1 comment:

  1. excellent work done by The Principal of G.M.M.School M.I.A.Careem.Keep it up.

    ReplyDelete