Monday, June 20, 2011

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று ஒலுவில் பிரதேசத்தில் நடைபெற்றது.


Terre des hommes( Tdh ) ட்ரஸ்ஹோமின் அனுசரனையில் ஒலுவில் அல்-அமீன் இளைஞர் கழகமும் பெரிய ஜும்ஆ பள்ளி வாசலும் இனைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் அக்கரைப்பற்று வலயத்தின் சிறுவர் நன் நடத்தை பொறுப்பதிகாரி எம்.ஏ.ஏ.பஷீர்டீன் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் மக்கள் தொடர்பாடல் பிரிவின் பொறுப்பாளர் எம்.ஐ.அப்துள்ளாஹ்  ஜும்ஆபள்ளித்தலைவர் ஏ.எல்.இஸ்மாயில் உட்பட சிறுவர்கழக அங்கத்தவர்கள் ட்ரஸ்ஹோம் உத்தியோகத்தர்களும் ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டதுடன் விழிப்புணர்வு துண்டுப்பிரசூரங்களும் மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.

இவ் விழிப்பு ஊர்வலம் சிறுவர் பாதுகாப்பு, சிறுவர் உரிமை, சிறுவர்  கல்வி தொடர்பான வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியவாறு கோசங்களுட்ன் இடம்பெற்றது.








No comments:

Post a Comment