Wednesday, June 22, 2011

விசேட அதிரடிப்படை வீராகளுக்கு நன்றி.


பொத்துவில் அறுகம்பை கடற்கரை பிரதேசத்தில் நீராடிக்கொண்டிருந்த இருவரை அலையடித்துக்கொண்டு சென்றபோது கரையில் நின்ற விஷேட அதிரடிப்படை வீர்ர்கள் காப்பாற்றியுள்ளனர்.
காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென ஏற்பட்ட பாரிய அலையில் சுமார் 150 மீற்றருக்கு அப்பால் இழுத்துச் செல்லப்பட்டு உயிருக்காக போராடிக் கொண்டிருப்பதனை  கரையில் நின்று அவதானித்த  ஐந்து விஷேட அதிரடிப்படை வீர்ர்கள் கடலில் பாய்ந்து இருவரையும் கரைக்கு கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை வழங்கி காப்பாற்றியுள்ளனர்.
காத்தான்குடி பிரதேசத்தைச்சேர்ந்த பாடசாலையின் அதிபர் ஒருவரும் ஆசிரியர் ஒருவருமே இவ்வாறு காப்பாற்றப்பட்டவர்களாகும்.
உயிர் பிழைத்த இருவரும் தங்கள் உயிரை காப்பாற்றிய விசேட அதிரடிப்படை வீராகளுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment