சர்ச்சக்குரிய கிழக்குமாகாண ஆசிரியர்களின் இடமாற்றத்தை ஜனாதிபதியின் உத்தரவில் நேற்று இரவு இடைநிறுத்தப்பட்டதையடுத்து அம்பாறை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளின் இயல்பு நிலை திரும்பியுள்ளதுடன் இன்று பாடசாலைகளுக்கு அதிகமான மாணவர்கள் வருகை தந்து கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
கடந்த திங்கள் கிழமை (2011.06.13) முதல் சம்மாந்துறை கல்வி வலயத்தில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் கல்முனை கல்வி வலயத்திலும் தொடர்ந்த மாணவர்களின் பாடசாலை பகிஷ்கரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்கள் கைவிடப்பட்டு ஜனாதிபதிக்கு நன்றி கூறியவர்களாக பாடசாலைக்கு புன்சிரிப்புடன் சமூகமளித்தனர்.
No comments:
Post a Comment