Sunday, June 19, 2011

ஆசிரியர்கள் கல்முனை வலயக்கல்விக் காரியாலயத்தை முற்றுகையிட்டக் கொண்டனர்.


  ஆசிரியர்கள் கல்முனை வலயக்கல்விக் காரியாலயத்தை முற்றுகையிட்டக் கொண்டனர்.

 திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸின் சந்திப்பின் பின் அங்கு வருகை தந்த இடமாற்றம் பெறும் ஆசிரியர் குழாம் கல்முனை கல்வி வலயக்காரியாலயத்தை முற்றுகையிட்டுக் கொண்டனர்.

 சில மணி நேரத்திற்க்குப்பின் அங்கு வருகை தந்த கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.தௌபிக் உட்பட பணிமனையின் பிரதிநிதிகளும் கல்முனை பெலிஸ் நிலைய பிரதிநிதிகளும் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சட்டத்தரணி றக்கீப் ஆகியோர் அவ்வாசிரியர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நிகழ்த்தினர்.

  இவ்விடமாற்றத்தின் மூலம் தமக்கு அநீதி இழைக்கப்பட்ட விடயங்களை அங்கு தெளிவாக ஆசிரியர்களால் புள்ளி விபரங்களுடன் முன் வைக்கப்பட்டது.  இவற்றை கேட்ட   வலயக் கல்விப்பணிப்பாளர் அனைத்து அநீதிகளையும் எழுத்து மூலம் பெற்றதுடன் இவற்றை உரிய தனக்கு மேலுள்ள அதிகாரிகளுக்கும் இதைப்பற்றி என்னிடம் பேசிய அரசியல்வாதிகளுக்கும் மின்மடல் மூலம் உடனடியாக அனுப்புவதாக வாக்களித்தார்.

இவ்வளவுதான் என்னுடைய அதிகாரம் இதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய முடியாது. என கல்முனை கல்விப்பணிப்பாளர் கூறியதுடன் ஆசிரியர்கள் கலைந்து சென்றனர்.






No comments:

Post a Comment