Sunday, June 26, 2011

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திராய்க்கேணி, பட்டியடிப்பிட்டி, கண்ணகிபுரம் ஆகிய பிரதேசங்களில் மூன்று சிறுமிகளிடம் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.


அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திராய்க்கேணி,  பட்டியடிப்பிட்டி, கண்ணகிபுரம் ஆகிய பிரதேசங்களில் வெவ்வேறு சம்பவங்களில் மூன்று சிறுமிகளிடம் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட மூவரை அக்கரைப்பற்று பொலிசார் கைது செய்துள்ளனர்.


அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள திராய்க்கேணி பிரதேசத்தில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியின் பக்கத்து வீட்டு குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ தினம் மாலை 4 மணிக்கு கைது செய்யப்பட்டார்.

அதேபோல், அக்கரைப்பற்றுப்  பள்ளிக்குடியிருப்புப் பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்ற 18 வயது இளைஞனை அம்பாரை தமணைப் பிரதேசத்தில் வைத்து தமணைப் பொலிசார் கைது செய்தனர்.

பின்னர் இவர்  இருவரும் அக்கரைப்பற்றுப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். இவ்விளைஞர் கள் ஏலவே ஒரு பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றால் ஒரு லட்சம் ரூபா பிணையில் விடுதலையானவர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஆலையடிவேம்பு கண்ணகிபுரம் முதலாம் பிரிவைச் சேர்ந்த 44 வயதான குடும்பஸ்தர் ஒருவர் 4 வயது பக்கத்து வீட்டுச் சிறுமியிடம் பாலியல் சேட்டை புரிந்தார் என்ற குற்றச் சாட்டில்  அன்றைய தினமே அக்கரைப்பற்றுப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரையும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் பதில் நீதிபதி இராமக்கமலன் முன்னிலையில் அக்கரைப்பற்றுப் பொலிசார் அஜர்படுத்தினர்.

இதன்போது நீதிபதி, 11 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபரினை 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் பாதிக்கப்பட்ட சிறுமியை சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் உத்தரவிட்டார்.

14 வயதுச் சிறுமியை இரண்டாவது தடவையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த 18 வயது இளைஞனை ரூபா 25 ஆயிரம் ரொக்கப் பிணையில் விடுவித்ததுடன் சிறுமியை மட்டக்களப்பு சிறுவர் நன்னடத்தை பிரிவில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.

இதேபோல் மூன்றாவது நபரான 4 வயது சிறுமியிடம் பாலியல் சேட்டை புரிந்த 44 வயதுடைய குடும்பஸ்த்தரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல பிரதேசங்களில்  கடந்த  நாட்களில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment