Saturday, June 11, 2011

இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள தேசிய சரணாலயங்களுக்குத் தேவையான சின்னங்களை வரைவதற்கான போட்டி நிகழ்சியொன்றினை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் நடாத்தவுள்ளது.


இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள தேசிய சரணாலயங்களுக்குத் தேவையான சின்னங்களை வரைவதற்கான போட்டி நிகழ்சியொன்றினை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் நடாத்தவுள்ளது.
யால, உடவலவ , வில்பத்து , பந்தல , ஹோட்டன் சமவெளி , வஸ்கமுவ , மின்னேரியா , கல்ஓயா , லுனுகம்வெகர ,  மதுறுஓயா , ஹொரகொல்ல , ஹிக்கடுவ , சோமாவதிய ,  அங்கமெட்டில , குமுண , லஹுகல , கிதுலன , உஸன்கொட , பிஜன் ஐலன்ட் , கௌடுல்ல போன்ற சரணாலயங்களுக்கு தனித்தனியாக சின்னங்கள் வரையப்படல் வேண்டு்ம்.
ஒருவரால்  ஒன்றுக்கு மேற்பட்ட சின்னங்கள் வரைய முடியும். புகோள , தொல்பொருள் ,ஜீவிய சரித்திரம் சம்பந்தமான விடயங்கள்  உள்ளடக்கப்பட்டிருப்பதுடன்  மதம் , சமயம் , இனம் என்பவற்றை பிரதிபலிக்கும் எந்த விடயங்களும் வரையப்படும் சின்னத்தில் உள்ளடக்கப்பட்டிருத்தல் கூடாது.
சின்னங்கள் கையால் வரையப்பட்டனவாகவோ  கணணியில் வரையப்பட்டதாகவோ இருக்கலாம்.
மத்தியஸ்தர் குழுவினால் தெரிவு செய்யப்படும்  சின்னங்களுக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.
வரையப்பட்ட சின்னங்கள் ஜுலை மாதம்  11 ஆம் திகதிக்கு முன்  வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் , 811 ஏ ஜயந்திபுர , பத்தரமுல்ல என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment