Monday, June 13, 2011

சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தை இன்று காலையில் மாணவர்கள் முற்றுகையிட்டுக் கொண்டனர்.

சம்மாந்துறை கல்வி வலயப்பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதால் தங்களது கல்வி சீரழிவதாகவும்    அவ் ஆசிரியர்களின் இடமாற்றத்தை இரத்தச்செய்யுமாறும் கூறி சம்மாந்துறை கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளின் மாணவர் இன்று காலை  முற்றுகையிட்டனர்.

சம்மாந்துறையின் கல்வியை பாழடிக்கும் கல்வி அதிகாரிகளுக்கும் வால் பிடிக்கும் புத்தி ஜீவிகளுக்கும் மந்த புத்தியா?.மாணவர்களின் கல்வியை பாதிக்கும் இடமாற்றத்தை இரத்துச்செய். சம்மாந்துறையின் மாணவர்களின் கல்வி வீழ்ச்சிக்கு வித்திட்ட அதிகாரிகளே வெளியேறு.  என் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் மாணவர்கள் காரியாளய வளாகத்தை முற்றுயிட்டுக் கொண்டனர்.

அவ்விடத்தில் வலயக்கல்விப்பணிப்பாளர் இல்லாமையால் உதவிக்கல்விப்பணிப்பாளர் எம்.எச்.அஸீஸ் முஹைடீன் வருகை தந்து ஒரு வாரத்திற்குள் இதற்கான தீர்வை தருவதாகக் கூறியும் அதை மாணவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.













1 comment:

  1. ஆசிரியர்களை ஆரம்பத்திலேயே இடமாற்றம் செய்யாமல் விட்டது கல்வித்தினைக்களத்தின் மாபெரும்
    தவறு,ஏனென்றால் ஒரு சில ஆசிரியர்கள் அதேபாடசாலையில் படித்து அங்கேயே கடமையேற்று இப்போது ஓய்வுபெறும் நிலைக்குகூட இருக்கிறார்கள் என்றால் இது யார் விட்ட தவறு, அதற்காக மொத்தமாக எல்லோரையும் இடமாற்றம் செய்யநினைப்பது மாபெரும் முட்டாள் தனம்,

    ReplyDelete