Sunday, June 12, 2011

அழுத்கம தர்காநகர் கல்வியியல் கல்லுாரியின் புதிய பீடாதிபதியாக சாய்ந்தமருதைச் சேர்ந்த யு.எல்.எம்.புகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

அழுத்கம  தர்காநகர்  கல்வியியல் கல்லுாரியின் புதிய பீடாதிபதியாக  சாய்ந்தமருதைச் சேர்ந்த   யு.எல்.எம்.புகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை ஆசிரியர் சேவையில் இணைந்த இவர்  1991 ஆண்டு முதல்  2011 ஆண்டுவரையிலான 20  வருட காலத்தில்  மட்டக்களப்பு  , அட்டாளைச்சேனை , ஸ்ரீபாத கல்வியியல் கல்லுாரிகளில் விரிவுரையாளராக  , சிரேஸ்ட விரிவுரையாளராக , இணைப்பதிகாரியாக ,  உப பீடாதிபதியாக பதவிகளை வகித்துள்ளார்.

சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயம் , கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலயம்  மற்றும் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லுாரி ஆகியவற்றின் பழைய மாணவரான  இவர்  பேராதனை பல்கலைக்கழகத்தில் கலை சிறப்புமாணி  ,  முதுகலைமாணி  , பட்டப்பின் டிப்ளோமா  , முகாமைத்துவ டிப்ளோமா  ஆகியவற்றிலும் சிறப்பு பட்டம் பெற்றவராகு

1 comment:

  1. i still can remember him as my class teacher in my 1st grade at KM/ Riyalul Jinnah Vid. Great guy.

    ReplyDelete