Saturday, June 11, 2011

அம்பாறை மாவட்டத்தின் உகன , தமன மற்றும் அம்பாறை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட அதிகமான இடங்களிலுள்ள பௌத்த விகாரைகளுக்கு அண்மையில் வீசப்பட்டுள்ள களி மண் குப்பி தட்டுகளிலிருந்து டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பௌத்த விகாரைகளில் இடம்பெறும் விஷேட நிகழ்வுகளின் போது எரிக்கப்படும் தேங்காய் எண்ணையில் எரியும் களிமண் தட்டுகள் பாவனை முடிந்த்தும் அயல் பிரதேசங்களில் வீசப்பட்டுக் காணப்படுகின்றன.
மழை காலங்களில் இவற்றில் நீர் நிரம்பி நுளம்பு குடம்பிகள் விளையக்கூடிய அபாயகரமான நிலையொன்று தோன்றியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
வழிபாடுகளின் போது விகாரைகளுக்கு வரும் பொதுமக்கள் தமது நோக்கம் நிறைவு பெற்றதும் பாவித்த களிமண் தட்டுகளை விகாரைக்கு அண்மையிலுள்ள பிரதேசங்களில் வீசி விட்டு செல்வதனாலேயே இந்த நிலமை தோன்றியுள்ளதாக அம்பாறை பௌத்த விகாரையின் விகாராதிபதி தெரிவித்தார்.

No comments:

Post a Comment