Friday, June 10, 2011

கல்முனை கல்வி மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி

கல்முனை கல்வி மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் 12 முதலிடங்களைப்பெற்று கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லாரி சாதனை படைத்து மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கல்முனை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த  அக்கரைப்பற்று , சம்மாந்துறை மற்றும் கல்முனை ஆகிய கல்வி வலயங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட மாவட்ட மட்டத்திலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த சில தினங்களுக்கு முன் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லாரி மைதானத்தில் இடம்பெற்றது.
இப்போட்டியில் கலந்து கொண்ட கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லாரி மாணவர்கள் 12 முதலிடங்களையும்  6 இரண்டாமிடங்களையும்  3 மூன்றாமிடங்களையும் பெற்றதுடன் 15 வயதுப்பிரிவில்  ஏ.யு.எம். ஆசாத்கான் மற்றும் எம்.ஏ.எம். அஸாம் ஆகிய இரு மாணவர்களும் இணைச்சம்பியன்களாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தனிப்பட்ட நிகழ்வுகளில் 7 முதலிடங்களும் அஞ்சலோட்டத்தில் 5 முதலிடங்களும் இதில் உள்ளடங்குகின்றது.
நடைபெறவுள்ள மாகாண மட்டப்போட்டிகளில் 16 நிகழ்சிகளில் கலந்து கொள்வதற்காக 30 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் இம்மாணவர்களுக்கு பயிற்சி வழங்கிய விளையாட்டுக்குழு செயலாளர் ஏ.எம்.அன்சார் உள்ளிட்ட உடற்கல்வித்துறை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கல்லாரி அதிபர் எம்.எம். இஸ்மாயில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment