Thursday, June 9, 2011

” சிறுவர் சமுதாயத்தை​ப் பேணுவோம்”


” சிறுவர் சமுதாயத்தைப் பேணுவோம்” எனும் தொனிப்பொருளில் பெரிய நீலாவணை கிராமிய சிறுவர் கண்காணிப்பு குழுவும் பாரதியார் இளைஞர் கழகமும் இனைந்து அரச சார்பற்ற நிறுவனமான டெரஸ் ஹோமின் ( Tdh ) அனுசரனையில் பெரிய நீலாவனை விஷ்னு மகா வித்தியாலயத்தில் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்தது.

பாடங்களில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவசமாக நடாத்திய பிரத்தியக வகுப்புகிளில் திறமைகளைக்காட்டிய இப் பாடசாலை மாணவர்களை மேலும் ஊக்குவிக்கும் நோக்கோடு பரிசளிப்புக்காக ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

பாடசாலை அதிபர் திருமதி நற்குணசிங்கம் அம்மணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் டெரஸ் ஹோமின் மட்டக்களப்பு அம்பாறை இணைப்பாளர் ஏ.தாஷன், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஏ.ரதன் ,நிறுவனங்களுக்கான உத்தியோகத்தர் ஐ.எல்.எம்.இர்பான், திட்ட முகாமையாளர் ஆர்.சிவபதிஸ் உட்பட ஊரின் பல பிரமுகர்களும் பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.












No comments:

Post a Comment