Thursday, June 2, 2011

வைத்திய பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது.

  மாணவர்களின்   நலன் கருதி பாடசாலை  வைத்திய பரிசோதனை முகாம் நடைபெற்றது.

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட மாளிகைக்காடு அல்-ஹுஸைன் வித்தியாலயத்தின் மாணவர்களுக்கான வைத்திய முகாம் பாடசாலையில் இன்று நடைபெற்றது.

வருடாவரும் மாணவர்களின் உடல் நிறை, உடல் நலம், பல் சுத்தம்,நகச்சுத்தம், போசாக்கு, ஆரோக்கியமான வாழ்வு மற்றும் பாடசாலையின் உள் வெளிச்சுத்தம்  போன்றவற்றை பரிசோதித்து அதை பதிவு செய்து தொடர்ச்சியாக அவதானித்து வரும் நடைமுறை இதில் பேணப்படும்.

 இம்முகாமில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லாபிர் பொது சுகாதார பரிசோதகர்களான பி.எம்.எம்.தாஸீம் , ரீ.பரமேஸ்வரன்   பாடசாலை அதிபர் ஏ.எல்.எம்.ஏ.நளீர் உட்பட ஆசிரியர்களும் கலந்த கொண்டனர்.







No comments:

Post a Comment