Wednesday, June 22, 2011

5 மாடுகளை கொலை செய்து அவற்றின் தலையுடன் 3 பேரை கல்கிரியாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

5 மாடுகளை கொலை செய்து அவற்றின் தலையுடன் 765 கிலோ இறைச்சியினை வான் ஒன்றில் கடத்திச் செல்ல முயன்ற 3 பேரை கல்கிரியாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.கல்கிரியாகமவிலுள்ள பாழடைந்த வீடொன்றின் பின்புறமாக மாடுகளை அறுத்து அவற்றின் இறைச்சியினை பக்குவமாக பொதி செய்து அக்குறனை பிரதேசத்திற்கு கொண்டு செல்ல தயாராக இருந்த வேளையில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த 3 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.கல்கிரியாகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கே.சி.எஸ். தயாவங்சவின் பணிப்புரையின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கெக்கிராவ நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டளர்.

No comments:

Post a Comment