Wednesday, June 8, 2011

2020 ஆம் ஆண்டு இலங்கையில் யாவருக்கும் பார்வை


”2020 ஆம் ஆண்டு இலங்கையில் யாவருக்கும் பார்வை” என்ற குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச கண்ணாடி வழங்கும் வைபவம் இன்று நடைபெற்றது.

சகாதார அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும்  ”2020 அம் ஆண்டில் யாவருக்கும் பார்வை எனும் திட்டத்தின் கீழ்   சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் தெரிவு செய்யப்பட்ட  பாடசாலையின் 57 மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்திலும் கல்முனை ஸாஹிறா தேசிய கல்லூரியிலும் நடைபெற்றன.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி ஸஹிலா இஸ்ஸதீன் பொது சுகாதார பரிசோதகர்களான எம்.என்.எம்.பைலான். சீ.பி.எம்.ஹனீபா உட்பட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.






No comments:

Post a Comment