Monday, June 20, 2011

1948 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்​பட்ட நூலகம் கையளிப்பு.


1948 ஆம் ஆண்டு பாண்டிருப்பு மறுமலர்ச்சிக் கழகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பாண்டிருப்பு பொது நூலகத்தை கல்முனை மாநகர சபையிடம் கையளிக்கும் நிகழ்வொன்று இடம்பெற்றது.

நிரந்தர கட்டிடமோ அல்லது இடமோ இல்லாத பாண்டிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள ஓரே ஒரு நூலகமான இந்நூலகத்தை கடந்தகாலங்களில் தனியார்களின் நிதி உதவியுடன் நடாத்தப்பட்டு வந்தது.

  அன்மையில்  கல்முனை பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில் நெக்டப் நிறுவனத்தினால் கட்டப்பட்ட பல்தேவைக்கட்டிடத்திலேயே தற்போது இயங்கி வரும் இந்நூலகத்தில் இரண்டு நூலகர்களும் தியாகத்ததுடன் சேவையாற்றி வருகின்றனர்.

இந்நூலகத்தை கல்முனை மாநகர சபையின் பராமரிப்பிற்கு வழங்கினால் இங்குள்ள நூல்களை அதிகரிக்கச் செய்வதோடு மேலும் அபிவிருத்தியடையச் செய்து உரிய நூலகர்களுக்கு ஊதியத்தையும் பெற்றுக் கொடுக்கலாம்  என்ற நோக்கோடு இன்நூலகம் கையளிக்கப்பட்டது.

பாண்டிருப்பு மறுமலர்ச்சிக் கழகத்தின் தலைவர் பி.எஸ்.புவிராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கல்முனை மாநகர சபை மேயர் மசூர் மௌலானா பிரதம அதிதியாகவும் பிரதி மேயர் ஏ.ஏ.பஷீர் மற்றும் எதிக்கட்சித்தலைவர் ஹென்றி மஹேந்திரன் ஆகியோர் விஷேட அதிதியாகவும் கலந்து கொணட்துடன் கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் பாண்டிருப்பு ஊர் பிரமுகர்களும் கலந்து  கொண்டனர்.

இந்நிகழ்வில் மேயருக்கு பொன்டனாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.






No comments:

Post a Comment