அகில இலங்கை நல்லுறவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 17வது சாமஸ்ரீ விருது வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிறு கல்முனை இருதய நாதர் தேவாலயத்தில் ஒன்றியத்தின் தலைவர் சரத் மலவர ஆராய்ச்சி தலைமையில் இடம்பெற்றது.
கல்வி, கலை , கலாசாரம் , சமயம் , ஊடகத்துறை மற்றும் சமூக சேவைகளில் தடம்பதித்த பல்லினத்தைச் சேர்ந்தவர்களும் இந்நிகழ்வில் பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னங்களும் பட்டங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
விருது பெற்றவர்கள் கல்முனை மக்கள் வங்கி சந்தியில் இருந்து பாண்ட வாத்தியம் முழங்க கூட்ட மண்டபத்திற்கு பிரதான வீதி வழியாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி ஏ.எல்.உம்மு மைமுனா பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில் மூவின கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் கலை கலாசார நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
கிழக்கு மாகாணத்தில் முதற்தடவையாக நடாத்தப்பட்ட இந்நிகழ்வினை கல்முனையைச் சேரந்த ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் தேசமான்ய யு.எல்.எம்.ஹனிபா ஏற்பாடு செய்திருந்தா
No comments:
Post a Comment