Sunday, June 12, 2011

பிரதேச செயலகங்களில் முதியோருக்கான சேவையினை வழங்குவதற்காக 15 பட்டதாரிகளை நியமிப்பதற்கானநடவடிக்கை.

வடக்கு கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலுள்ள பிரதேச செயலகங்களில் முதியோருக்கான சேவையினை வழங்குவதற்காக  15 பட்டதாரிகளை நியமிப்பதற்கானநடவடிக்கைகளை சமூக சேவைகள் அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.பிரதேச செயலகங்களுக்கு சேவைகளை பெறுவதற்காக வரும் முதியோர்கள் பலவிதமான கஸ்டங்களை அனுபவித்து வருவதாக சமூக சேவைகள் அமைச்சுக்கு தொடர்சியாக முறைப்பாடுகள் கிடைத்ததனைத் தொடர்நதே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பிரதேச செயலகங்களில் தற்போது பொது மக்களுக்கு சேவையினை வழங்குவதற்காக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் பலவிதமான செயற்திட்டங்கள்நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கென விசேட உத்தியோஸ்தர்கள் நியமிக்கப்பட்டு வேலைப் பங்கீடும் வழங்கப்பட்டுள்ளது. இருந்தும் முதியோர்களை கவனித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராய்ந்துஅவர்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதில் மந்தமான நிலையொன்று காணப்பட்டது. தற்போது சமூக சேவைகள் அமைச்சு  மேற்கொண்டுள்ள புதிய பட்டதாரிகள்நியமனத்தின் மூலம் முதியோருக்கான சேவை  மிக விரைவாக வழங்கப்படும் என சமூக சேவைகள் அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment