Saturday, June 25, 2011

வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் தொழில் தகுதி இருந்தும் வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுள் 15,000 பேருக்கு தென்கொரியாவில் தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கை

வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் தொழில் தகுதி இருந்தும் வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுள் 15,000 பேருக்கு தென்கொரியாவில் தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி சேவைகள் அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தென் கொரிய அரசுடன் நடாத்திய பேச்சு வார்த்தையைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலை மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக இம்மாகாணங்களிலுள்ள இளைஞர்கள் அரச நிறுவனங்களிலோ தனியார் நிறுவனங்களிலோ தமது தகுதிக்கேற்ப தொழில் வாய்ப்பின பெற முடியாமல் போனது. தொழில் துறையில்  அனுபவமும் பயிற்சியும்  அறிவும்  இருந்தும் தொழில் சான்றிதழ்  இல்லாத காரணத்தினால் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்பினை பெற முடியாத நிலையில் உள்ளனர். இந்த இளைஞர்களுக்கு கொரிய மொழியினை கற்பிப்பதுடன்  தொழில் சார் பயிற்சியினையும் வழங்கி வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்காக அனுப்பும் போது கூடுதலான சம்பளத்தை பெற முடியுமென அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

No comments:

Post a Comment