Saturday, June 11, 2011

இறப்பரை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழிலில் 1000 இற்கும் அதிகமான பின்தங்கிய வருமானம் குறைந்த குடும்பங்களை இணைத்துக் கொள்ள பொருளாதார அபிவிருத்தி திணைக்களம் முன்வந்துள்ளது.


இறப்பரை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழிலில் 1000 இற்கும் அதிகமான பின்தங்கிய வருமானம் குறைந்த குடும்பங்களை இணைத்துக் கொள்ள பொருளாதார அபிவிருத்தி திணைக்களம் முன்வந்துள்ளது.
”திவிநெகும”  திட்டத்தினை மேலும் வலுவுட்டும் முகமாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையில் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பலபகுதிகளிலுமிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 1000 குடும்பங்களை சேர்ந்த அங்கத்தவர்களுக்கு இறப்பரை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில் துறையில் பயிற்சி வழங்கி அதன் மூலம் சுய தொழில் வாய்ப்பினை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர  உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்யும் கைத்தொழில் முயற்சியாளர்கள் மூலமாக தொழிற்சாலைகளை அண்டிய பிரதேசங்களில் வாழும் வருமானம் குறைந்த மக்களை தெரிவு செய்து அவர்களுக்கு பயிற்சி வழங்குவதே இத்திட்டத்தின் முதல் நோக்காகும்.
தெரிவு செய்யப்படும் குடும்ப அங்கத்தவர்களுக்கு தொழில் முயற்சிக்கு தேவையான மூலப்பொருளான இறப்பர் , தொழில் நுட்ப அறிவு  மற்றும் தொழில் ரீதியிலான செயன்“முறை என்பனவற்றை இலவசாக வழங்குவதுடன் அவர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு சிறந்த சந்தை வாய்ப்பினையும் பெற்றுக்கொடுக்க பொருளாதார அபிவிருத்தி திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment