Thursday, June 30, 2011

நிந்தவுர் சி.ஓ.லெஸ்தகீர் சர்வதேச பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு .


நிந்தவுர் சி.ஓ.லெஸ்தகீர் சர்வதேச பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு நிந்தவுர் அல் மஸ்ஹர் பெண்கள் உயர் பாடசாலையில்  அதிபர் ஐ.எம்.இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்றது.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஸி.பைஸல் காசிம் பிரதம அதிதியாகவும் , தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் கலை நிகழ்சிகளும் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும்  அதிதிகளினால் பரிசில்கள் வழங்கப்பட்டன.ள கீரை , பொன்னாங்கன்னி மற்றும் வல்லாரை வீட்டுத்தோட்ட செய்கை வெற்றியளித்துள்ளது.


ஷெடோ நிறுவனத்தினால் சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வரும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான வீட்டுத்தோட்ட செய்கை வெற்றியளித்துள்ளது.
பயிர்செய்யப்பட்டுள்ள கீரை , பொன்னாங்கன்னி மற்றும் வல்லாரை என்பன சிறந்த விளைச்சலை தந்துள்ளன.


மக்கள் வங்கி ஆரம்பிக்கப்பட்டு 50 வருடங்கள்.

மக்கள் வங்கி ஆரம்பிக்கப்பட்டு 50 வருடங்கள் புர்த்தியடைவதனை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்படவுள்ள பொன்விழா நிகழ்வுகள் பற்றி ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும்  நிகழ்வொன்று கல்முனை மக்கள் வங்கி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.  அமர்வில் அம்பாறை மக்கள் வங்கியின் பிராந்திய முகாமையாளர்  டபிள்யு.எம்.ஆரியஞான  , மக்கள் வங்கியின் கல்முனை கிளை முகாமையாளர் எம்.ஐ.எம்.பதுறுதீன் மற்றும் மக்கள் வங்கியின் பாதுகாப்பு சிரேஸ்ட உத்தியோஸ்தர் ஆர்.சிறிவேல்ராஜ்  ஆகியோர் கலந்து கொண்டனர்.


அடுத்த மாதம் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை , திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உற்பத்திக் கண்காட்சி

அடுத்த மாதம் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை , திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில்  ஒழுங்கு  செய்யப்பட்டுள்ள உற்பத்திக் கண்காட்சி சம்பந்தமாக   திருகோணமலை கிழக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மகாநாட்டில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரையப்பா நவரெட்ண ராஜா  கண்காட்சியின் ஒழுங்கு பற்றி விளக்கமளித்தார்.     இந்நிகழ்வில்  கிழக்கு மாகாண அமைச்சர்கள்  , படை அதிகாரிகள்  மற்றும்   திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்
Wednesday, June 29, 2011

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இஸ்லாமிய இளைஞர் அமைப்பு பலவிதமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றது.


பொத்துவில் தொகுதியின் காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாளிகைக்காடு கிராமத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில்  இஸ்லாமிய இளைஞர் அமைப்பு பலவிதமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றது.
இதன் ஒரு கட்டமாக இலங்கை மின்சார சபையினால் வழங்கப்படும் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ள வசதியற்ற  14 ஏழைக்குடும்பங்களுக்கு  ஒரு வீட்டுக்கு தலா 13,500 ருபா செலவில் மின்சார வசதியும்   தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் வழங்கப்படும் குடி நீரை பெற்றுக்கொள்ள வசதியற்ற 4 குடும்பங்களுக்கு  தலா 15,000 வீதமும் பணம் செலுத்தி அவற்றை பெற்றுக் கொடுத்ததுடன் அவற்றுக்கான றஸீதுகளையும் குடும்ப தலைவர் மற்றும் தலைவிகளிடம் இஸ்லாமிய இளைஞர் அமைப்பின் ஸ்தாபக தலைவரும்   நடைபெறவுள்ள காரைதீவு பிரதேச சபைக்கான உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான  ஏ. பாயிஸ் வழங்கி வைத்தார்.
சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஸகிலா இஸ்ஸதீன் தலைமை.


சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் சாய்ந்தமருது கோட்டத்தை சேர்ந்த பாடசாலை ஆசியர்களுக்கான செயலமர்வு சாய்ந்தமருது மல்ஹருஸ் ஷம்ஸ் மாகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் ஐ. எல். ஏ.றஹிம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுற்றாடல் நோய் தடுப்பு அதிகாரி டாக்டர் எம்.ஏ.ஷாபி கலந்து கொண்டதுடன் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஸகிலா இஸ்ஸதீன், பதில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்   பைஸல் எம்  முஸ்தபா உட்பட  பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையின் 128ஆவது ஸ்தாபகர் தினத்தை முன்னிட்டு இறுதி நாள் நிகழ்வுகள் புதன் கிழமை இடம்பெற்றன.


கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையின் 128ஆவது ஸ்தாபகர் தினத்தை முன்னிட்டு இறுதி நாள் நிகழ்வுகள்  புதன் கிழமை இடம்பெற்றன.

மேற்படி பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட 128ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அப்பாடசாலையின் ஸ்தாபகர்களை நினைவு கூறியதோடு வரலாற்று நினைவுக்கட்டிடம் திறப்பு. மரம் நடுகை. கலைநிகழ்ச்சிகள். பரிசளிப்பு மற்றும் அதிதி கௌரவிப்பு போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.

அதிபர் வி.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் பிரின்ஸ் காஸிநாதர் பிரதம அதிதியாகவும். கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி பி.சுவர்ணராஜா விஷேட அதிதியாகவும் கலந்து கொண்டதுடன் பாடசாலையின் நலன் விரும்பிகள் மற்றும் ஏனைய பாடசாலை அதிபர்களும் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் பல துறைகளிலும் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.Tuesday, June 28, 2011

அபுர்வமான முறையில் கோழி ஒன்று வால் மற்றும் சொண்டுகளுடன் முட்டை ஒன்றை இட்டுள்ளது.


சாய்ந்தமருது 13ம் கிராமசேவகர் பிரிவில் 195ம் இலக்க  மில் லேனில் வசிக்கும்
எம்.எச்.நஜிமா மீர்சாவின்  இல்லத்தில் அபுர்வமான முறையில் கோழி ஒன்று வால் மற்றும்
சொண்டுகளுடன் முட்டை ஒன்றை இட்டுள்ளது. இந்த அதிசயத்தை பார்வையிடுவதற்காக அம்பாறை
மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலுமிருந்தும் மக்கள் திரண்ட வண்ணம் இருக்கின்றனர்.


சுகாதார போசாக்கு மாதத்தினை முன்னிட்டு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீன் வழக்கம்.

சுகாதார போசாக்கு மாதத்தினை முன்னிட்டு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட சுகாதார கிளினிக் நிலைய பணிமனையில் குழந்தைகளுக்கு போசாக்கு நிறைந்த இலைக்கஞ்சி வழங்குவதோடு தாய்மாருக்கு போசாக்கு பற்றி  விழிப்புணர்வுட்டும் செயலமர்வும் பதில் பொது சுகாதார பரிசோதகர் பைஸால் எம் முஸ்தபா தலைமையில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.கற்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கிடையில் காணப்படும்  சுகாதாரமான வாழ்விற்கு வயதுக்கேற்ற உணவுட்டல் முறை , போசாக்கான உணவு பழக்க வழக்கம் பற்றியும் தாய்மாருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
ஹோமாகம மத்திய கல்லூரியில் கண்காட்சி.

ஹோமாகம மத்திய கல்லூரியில்  ”திவிநெகும ”  மனைப்பொருளியல் கண்காட்சியொன்று நடைபெற்று வருகின்றது. பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பஸீல் ராஜபக்ஷ ,அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டதுடன் கண்காட்சி கூடத்தினையும்  பார்வையிட்டனர்.கிராமப்புற மக்களால் தயார் செய்யப்பட்ட பல பொருட்கள் கண்காட்சியன் போது பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.