கல்முனை பொது நுாலகத்தை பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய விதத்தில் பொருத்தமான இடத்தில் நிர்மானிக்குமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கல்முனைத் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஏ.ஆர்.மன்சூரின் பெரு முயற்சியினால் அப்போதய வெளிவிவகார அமைச்சராகவிருந்த காலஞ்சென்ற ஏ.ஸி.எஸ்.ஹமீதினால் சகல வசதிகளும் கொண்டதாக கல்முனை பொது நுாலகம் திறந்து வைக்கப்பட்டது.
சிறுவர்களுக்கான பொழுது போக்கு விளையாட்டுத் திடலுடன் கூடிய விசாலமான கட்டிடத்தில் அமைக்கப்பட்ட இந்த நுாலகம் கடந்த காலங்களில் பல இடங்களுக்கு மாற்றப்பட்டு இறுதியாக பழைய இடத்திற்கே கொண்டு வரப்பட்டுள்ளது. இருந்தும் இந்த நுாலகத்தில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் குறுகிய ஒரு எல்லைக்குள் மட்டுப்படுத்தப்பட்டு நுாலகத்திற்கு பொருத்தமில்லாத அமைதியற்ற இடமாக காணப்படுகின்றது.
அருகில் கல்முனை பிரதான பஸ் நிலையம் அமைந்துள்ளதால் எந்த நேரமும் வாகனங்களின் சத்தமும் இரைச்சலுமாகவே இருப்பதனால் நுாலகத்தை பயன்படுத்தமுடியாமல் உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் கூடியகவனம் செலுத்தி கல்முனை பொது நுாலகத்தை பொருத்தமான இடத்தில் நிர்மானிக்குமாறு கேட்டுள்ளனர்.

No comments:
Post a Comment