Monday, May 16, 2011

காரைதீவு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் 5 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் விஞ்ஞானப்பாடத்திற்கான செயன்முறை


காரைதீவு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் 5 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் விஞ்ஞானப்பாடத்திற்கான செயன்முறை அறிவினை விருத்தி செய்யும் நோக்கில் கல்முனை கல்வி வலய ஆரம்ப பிரிவு கல்வி அபிவிருத்திப் பிரிவு மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் செயன்முறை முகாமொன்றினை இன்று காலை ஒழுங்கு செய்திருந்த்து.
கல்முனை வலய ஆரம்ப பிரிவு உதவி கல்விப்பணிப்பாளர் இஸட். ஏ.நதீர் மௌலவி தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்முனை வலய விஞ்ஞான பாடத்திற்கான உதவி கல்விப்பணிப்பாளர் ஏ. அலியார் , சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய விஞ்ஞான பாட ஆசிரியர் ஏ.ஆர்.எம்.நளீம் ,சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலய விஞ்ஞான பாட ஆசிரியர் எம்.ஏ.எஸ்.இஸ்திகார் மற்றும் மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய அதிபர் ஏ.எல்.எம்.ஏ. நளீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச்செயன்முறை முகாமில் காரைதீவு கோட்டத்திற்குட்பட்ட காரைதீவு கண்ணகி வித்தியாலயம் , காரைதீவு ஆர்.கே.எம்.ஆண்கள் வித்தியாலயம் , மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயம் மற்றும் மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் கலந்து கொண்டனர்.





No comments:

Post a Comment