Tuesday, May 26, 2015

வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்பாள் ஆலய வருடாந்த திருக்குளிர்த்திவரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்பாள் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி வைகாசிச்சடங்கு கடந்த திங்கள் மாலை கடல்தீர்த்தம் கொணர்ந்து திருக்கல்யாணக்கால் முறித்து நடுவதுடன் ஆரம்பமாகியது. ஆலயத்திலிருந்து கப்புகனார் சகிதம் கடலுக்குச்சென்று அங்கு கடற்கரையில் விசேடபூஜை செய்து கடல்தீர்த்தம் கொணரப்பட்டு நடைபாவாடை மீது வலம்வந்து திருக்கல்யாணக்கால் முறித்து ஆலயத்திற்குக் கொண்டுசென்று பின்னர் கல்யாணக்கால் நடப்பட்டு விஷேட பூசை வழிபாடுகளும் இடம்பெற்றன.கல்முனை ஸாஹிராக்கல்லூரி பிரதி அதிபர் எம்.எஸ்.எம்.ஹம்ஸா தனது 60வது வயதில் ஓய்வு பெற்றார்.

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் 4 தசாப்தங்களாக ஆசிரியராக , பகுதித்தலைவராக , உதவி அதிபராக , பிரதி அதிபராக , அதிபராக கடமையாற்றிய கணிதபாட சிரேஸ்ட ஆசிரியர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.ஹம்ஸா  தனது 60வது அகவையில் 
ஓய்வுபெற்றார்.
1975 ஆம் ஆண்டு கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் கணிதபாட ஆசிரியராக இணைந்து கொண்ட இவர் கணித பாடத்தில் பாண்டித்தியம் பெற்றிருந்ததுடன் , அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பொறியியல் , மருத்துவம் , கணக்கியல் ,கலை ,  சட்டம் , அரச சேவையில் உயர் பதவி , பல கல்விமான்கள் என உருவாவதற்கு காரணகர்த்தாவாக திகழ்ந்தவர்.
பாடசாலையில் தான் அதிபர் பதவியியனை வகித்த போதிலும் இறுதிவரை மாணவர்களுக்கு கணித பாடத்தினை கற்பித்த பெருமை இவரைச்சாரும். இவரால் கற்று உயர்ந்தவர்கள் பலர். வறிய மாணவர்களுக்கு உதவிக்கரம் நீண்டும் இவர் சாய்ந்தமருதில் பிறந்து நிந்தவுரில் திருமணம் முடித்துள்ளார்.
சாய்ந்தமருதில் கற்ற , நல்ல அபிமானம் பெற்ற , ஒழுக்கமுள்ள , பெரிய குடும்பத்தில் பிறந்த இவர் ஏனைய ஆசான்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர்.
தனது முதல் நியமனத்தை அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் பெற்றுக் கொண்ட இவர் பின்னர் மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரியிலும் கற்பித்துள்ளார்.
வயதால் ஓய்வு பெற்றாலும் உடல் தேகாரோக்கியத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இவரின் ஆலோசனைகளும் வழிகாட்டலும் எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் பிரயோசணம் உள்ளதாக அமையும்.
 ஹம்ஸா சேரின்  நீடித்த வாழ்வுக்காக எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போமாககல்முனை ஸாகிராக்கல்லூரி அணி சிங்கர் ஸ்ரீலங்கா கிண்ணத்திற்காக நாளை பண்டாரவளையில் புனித தோமஸ் கல்லூரியுடன் சமரில்( நமது நிருபர்)
கல்முனை ஸாஹிரா சிங்கர் ஸ்ரீலங்கா இலங்கை பாடசாலைகள் கிறிக்கட் சம்மேளனம் சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் அநுசரணையில் ஒழுங்கு செய்துள்ள அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுக்குட்பட்ட கிறிக்கட் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி நானை( 27 ) பண்டாரவளையில் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளது.
தேசிய ரீதியில் ஒவ்வொரு வருடமும் நடத்தாப்படும் மேற்படி சுற்றுப் போட்டியில் கடந்த வருடம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை இறுதிப் போட்டியில் தோற்கடித்ததன் மூலம் கல்முனை ஸாஹிரா தேசியகல்லூரி அகில இலங்கை சிங்கர் ஸ்ரீ லங்கா பாடசாலைகள் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தது.
இவ்வருடத்திற்கான போட்டி நாளை  ( 27 )  பண்டாரவளை புனித தோமஸ் கல்லூரி மைதானத்தில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரிக்கும் பண்டாரவளை புனித தோமஸ் கல்லூரிக்குமிடையில் இடம்பெறவுள்ளது.
அகில இலங்கையிலுமுள்ள தெரிவு செய்யப்பட்ட 33 பாடசாலைகள் கலந்து கொள்ளவுள்ள மேற்படி சுற்றுப் போட்டியில் கிழக்கு மாகாணத்திலிருந்து கலந்து கொள்ளும் ஒரே பாடசாலையாக கல்முனை ஸாஹிரா தேசியகல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சுற்றுப் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி , கொழும்பு றோயல் கல்லூரி அக்குரண அல் அஸ்ஹர் கல்லூரி , ,பண்டாரவளை புனித தோமஸ் கல்லூரி , புனித அலோசியஸ் கல்லூரி , பலாங்கொட ஆனந்த மைத்திரிய மகா வித்தியாலயம் , கல்கிசை புனித தோமஸ் கல்லூரி , பாதுக்க ஸ்ரீ பியரெட்ன மகா வித்தியாலயம் , கொட்டாவ ஆனந்த மகா வித்தியாலயம் , கொழும்பு நாலந்த கல்லூரி , கொழும்பு புனித பீற்றஸ் கல்லூரி , கொழும்பு வெலுவான கல்லூரி , கொழும்பு இந்துக் கல்லூரி , றாகம் பஸீலிகா கல்லூரி , மொரட்டுவ பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி , கொழும்பு தேஸ்டன் கல்லூரி , ஹுங்கம விஜயபா கல்லூரி , மத்துகம் சீ.டபிள்யு .டபிள்யு.கன்னங்கரா வித்தியாலயம் , வாதுவ மத்திய கல்லூரி , ஹொரண தக்ஸிலா கல்லூரி , கரண்தெனிய மத்திய கல்லூரி , யாழ்ப்பாணம் புனித பற்றிக்ஸ் கல்லூரி , யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி , யாழ்ப்பாணம் யாழ்ப்பாணக்கல்லூரி , கோட்டே புனித தோமஸ் கல்லூரி , தெஹிவல எஸ்.ரீ.எஸ்.கல்லூரி , மொரட்டுவ புனித செபஸ்தியன் ,  ஹேனாகம வித்தியாலயம் , கட்டுனேரிய புனித செபஸ்தியான் , குருநாகலை மலியதேவ கல்லூரி , நீர்கொழும்பு ஹரிஸ்சந்திரா கல்லூரி , வாரியப்பொல ஸ்ரீ சுமங்கல கல்லூரி , ஆகிய இலங்கையின் முன்னணி பாடசாலைகள் கலந்து கொள்ளவுள்ளன.
கல்முனை ஸாஹிரா தேசியகல்லூரி அணி வீரர்களுக்கும் அதன் பயிற்றுவிப்பாளர் ஆசிரியர் அலியார் ஏ பைஸருக்கும் கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் , விளையாட்டு அபிவிருத்திக்குழு , பாடசாலை அபிவிருத்திச் சங்கம் , பழைய மாணவர் சங்கம் என்பன நடைபெறவிருக்கும் போட்டியில் கடந்த வருடம் போல் வெற்றி பெற்று அகில இலங்கை சம்பியன்களாக வெற்றிபெற்று எமது மண்ணிற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமையைத் தேடித்தர வேண்டும் என வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.சாய்ந்தமருது கரைவாகு விளையாட்டு மைதானம் சர்வதேச அந்தஸத்தைப் பெறும் - எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி.( நமது நிருபர்)
சாய்ந்தமருது பிரதேசம் சுனாமி அனர்த்தத்தினால்  இழந்து தவித்த விளையாட்டு மைதானம் ஒரு தசாப்தத்தின் பின்னர் இப்பிரதேச இளைஞர்கள் விளையாடக்கூடிய மைதானமாக உருமாறியிருப்பது கண்டு பெரு மகிழ்சியடைகின்றேன்.

Sunday, January 11, 2015

இலங்கையிலுள்ள தேர்தல் தொகுதிகளுள் கல்முனைத் தொகுதி இரண்டு சாதனைகளைப் படைத்துள்ளது.

( நமது கல்முனை நிருபர்)
கடந்த 8 ஆம் திகதி நடைபெற்று முடிந்த இலங்கையின் 7 வது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் படி இலங்கையிலுள்ள தேர்தல் தொகுதிகளுள் கல்முனைத் தொகுதி இரண்டு சாதனைகளைப் படைத்துள்ளது.

இலங்கையின் 6 வது ஜனாதிபதி மைத்திரபால சிரிசேன அவர்களுக்கு கல்முனைத் தொகுதியில் அளிக்கப்பட்ட அதி கூடிய வாக்கு வீதம் 89.81%  ஆகும்.
அதே போன்று இலங்கையிலுள்ள தொகுதிகளுள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கு கல்முனைத் தொகுதியில் அளிக்கப்பட்ட ஆகக்குறைந்த வாக்கு வீதம் 9.26% வீதமாகும்.

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி கிறிக்கட் அணி இம்மாத இறுதியில் மலேசியா பயணமாகவுள்ளது.

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி கிறிக்கட் அணி இம்மாத இறுதியில் மலேசியா பயணமாகவுள்ளது.
ஸ்ரீலங்கா  கிறிக்கட் , அகில இலங்கை பாடசாலைகள் கிறிக்கட் சம்மேளனம் ஆகியள இணைந்து கடந்த வருடம் ஒழுங்கு செய்திருந்த அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கடினபந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற போது யாழ் மத்திய கல்லூரியை வெற்றி கொண்டு தேசிய ரீதியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தது.
கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் , இக்கல்லூரியின் பழைய மாணலருமான ஏ.எம்.ஜெமீல் மேற்கொண்டுள்ள நடவடிக்கை காரணமாக இக் கல்லூரியின் கிறிக்கட் அணி கிறிக்கட் பயிற்றுவிப்பாளர் அலியார் பைஸர் தலைமையில் இம்மாத இறுதியில் மலேசியா சென்று அங்குள்ள பாடசாலை அணிகள் மற்றும் கழகங்களுடன் பல போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாக கல்லூரியின் வினையாட்டுக்குழு செயலாளர் ஏ.எம்.அன்சார் தெரிவித்தார்.
கடந்த வருடம் இக்கல்லூரியின் பெட்மின்டன் மாணவர் அணி மலேசியா சென்று பல போட்டிகளில் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதே வேளை கல்லூரியில் அண்மையில் இடம்பெற்ற கிறிக்கட் வீரர்களை பாராட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் இக்கல்லூரி கிறிக்கட் அணியினை பாகிஸ்தானிலுள்ள பாடசாலை அணிகளுடன் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியிலிருந்து 150 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்.( எம்.ஏ.அஹ்ஸன் அக்தர்)
அண்மையில் வெளியிடப்பட்ட .பொ.. உயர்தர பரீட்சை முடிவுகளின் படி கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியிலிருந்து 150 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
பொறியியல் துறைக்கு .எச்.எம்.அஜ்மல் பாயிக் , எச்..சதீர் , எம்.ஜே.எம்.நிஸ்பர் ,எம்.எச்.எம்.றிஜாஸ் , .எச்.எம்.இஸ்பர்,எம்.என்..நாஸிப்,எம்.என்.எம்.நளீர் ஆகிய 7 மாணவர்கள் பொறியில் துறைக்கும் எம்..எச்.ஆகில் ஜாவித் மருத்துவத் துறைக்கும் , கணிதத்துறைக்கு  30 மாணவர்களும் , பல் வைத்தியம் , மிருக வைத்தியம் , உயிரியல் , விவசாயம் , தொழில்நுட்பம் ,கட்டடிட நிர்மாணம் , நில அளவை உள்ளிட்ட துறைகளுக்கு 42 மாணவர்களும் , வர்த்தக முகாமைத்துவ துறைக்கு 4 மாணவர்களும் , வர்த்தகத்துறை மற்றும் கலைத்துறைகளுக்கு  66 மாணவர்களும்  பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளதாக கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தெரிவித்தார்
அத்துடன் அரசாங்கம் அறிமுப்படுத்தியுள்ள தொழில் நுட்பத்துறையில் இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள .பொ.. உயர்தரப்பரீட்சைக்கு நூற்றுக்கும் அதிகமான தமிழ் முஸ்லிம் மாணவர்கள் இக்கல்லூரியிலிருந்து தோற்றவுள்ளதாக பகுதித்த தலைவர் .ஆதம்பாவா தெரிவித்தார்.

இதே வேனையில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் கல்வி கற்று மூன்றாம் தடவை .பொ.. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய பல மாணவர்கள் பொறியியல் , மருத்துவம் , கணிதம் , உயிரியல் , வர்த்தகம் மற்றும் கலைத்துறைகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மாணவர்கள் அறிவித்துள்ளதாக கல்லூரியின் உதவி அதிபர் யு.எல்.எஸ்.ஹமீட் மௌலவி தெரிவித்தார்.

சிரேஸ்ட ஊடகவியலாளர் மீரா எஸ் இஸ்ஸதீன் திடீர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
அம்பாறை மாவட்ட சிரேஸ்ட ஊடகவியலாளரும் , அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவருமான மீரா எஸ் இஸ்ஸதீன் திடீர் சுகவீனமுற்ற நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது
மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
இவர் ஊடகத்துறைக்கு பல சேவைகள் செய்துள்ளதுடன் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பல ஊடகவியலாளர்களின் உயர்வுக்கும் பல தியாகங்களை புரிந்துள்ளார்.
இவர் சிறந்த உடல் ஆரோக்கியத்தைப் பெறவும் தனது சுகவீனத்திலிருந்து மீட்சி பெறவும் அனைவரும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்குமாறும்  கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Saturday, December 27, 2014

சீரற்ற காலநிலை காரணமாக ஒலுவில்பிரதேசத்தில் பாரிய கடலரிப்பு அபாயம்( நமது நிருபர்)  

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை, வெள்ளம்,கடல் கொந்தளிப்பு  மற்றும்   சீரற்ற காலநிலை காரணமாக ஒலுவில்பிரதேசத்தில் பாரிய கடலரிப்பு அபாயம் தோன்றியுள்ளது.
ஒலுவில் வெளிச்ச வீட்டை அண்டிய பிரதேசத்தில் ஏற்பட்டுள்ளபாரிய கடலரிப்பு காரணமாக  தென்னந் தோட்டங்கள், மீனவர்வாடிகள் மற்றும் கட்டடங்கள் என்பன கடல் அலையினால் அடித்து செல்லப்பட்டுள்ளன. வெளிச்ச வீட்டுக்குச் செல்லும் பாதையும்முற்றாக சேதமுற்றுள்ளது.
கடலரிப்பினால் இப்பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு மீனவர்களின் பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக் கணக்கான தென்னந் தோட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இப்பிரதேசத்தில் ஒவ்வொரு வருடமும் பல தடவைகள் மிக மோசமான கடலரிப்பு ஏற்படுவதோடுஇக்கடலரிப்பைத் தடுக்க இதுவரை காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென  பிரதேச பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.