Monday, October 31, 2016

கல்முனை வின்னேர்ஸ் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு பெரு விழா

கல்முனை வின்னேர்ஸ் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு பெரு விழா கடந்த ஞாயிற்றுக் கிழமை கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் யு.எல்.எம்.ஹிலால் தலைமையில் இடம்பெற்ற மேற்படி பரிசளிப்பு விழாவில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் பிரதம அதிதியாகவும் , அல் அஸ்ஹர் வித்தியாலய அதிபர் ஏ.எச்.அலி அக்பர் , விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ பாவா , கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி உதவி அதிபர் எம்.ஏ.சலாம் , சிரேஸ்ட ஆசிரியர் எம்.ஐ.எம்.அஸ்ஹர்  ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
அண்மையில் பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற பரீட்சைகளின் அடிப்படையில் சிறந்த அடைவு மட்டத்தைப் பெற்றுக் கொண்ட சுமார் 350 மாணவர்கள் இந்த நிகழ்வின் போது கிண்ணங்கள் வழங்கியும் கற்பித்த ஆசிரியர்கள் பதக்கங்கள் அணிவித்தும் கௌரவிக்கப்பட்டனர்.
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன பிறை எப்.எம்.சிரேஸ்ட அறிவிப்பாளரும் , தொலைக்காட்சி பகுதி நேர செய்தி வாசிப்பாளரும் ஆசிரியருமான ஏ.எல்.எம்.நயீம் இந்த நிகழ்வின் போது விசேட பாராட்டுதலுக்கு உட்படுத்தப்பட்டதுடன் இக் கல்லூரியின் பழைய மாணவர்கள் கல்லூரியின் எதிர்கால வளர்சிக்காக  ஒரு தொகை நிதியினையும் கல்லூரி அதிபர் யு.எல்.எம்.ஹிலாலிடம் வழங்கியும் வைத்தனர்.

இந்நிகழ்வில் பெரும் திரளான மாணவர்களின் பெற்றோர்களும் பழைய மாணவர்களும் கலந்து கொண்டனர்.










Sunday, April 3, 2016

சாய்ந்தமருது - மாளிகைக்காடு பிரதான வீதியில் சதோச வர்த்தக நிறுவனத்தின் கிளையொன்று இன்று திறந்து வைக்கப்பட்டது

சாய்ந்தமருது - மாளிகைக்காடு பிரதான வீதியில் சதோச வர்த்தக நிறுவனத்தின் கிளையொன்று இன்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவருமான அல்ஹாஜ் றிஸாத் பதியுதீன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி , பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப் , நவவி ,  அரச வர்த்தக கூட்டுத்தாபன தலைவரும் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் அல்ஹாஜ் எஸ்.சுபைதீன் , கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஸி.முபீத் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிழக்கு மாகாண கொள்கை பரப்பு செயலாளர் எம்.எம்.ஜுனைதீன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.




Sunday, January 31, 2016

2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.


இந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா ?

2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த  கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.
கடந்த சனிக்கிழமை கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய விருத்தி தேசிய வாரத்தினையொட்டிய இறுதி நாள் நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது மைதானத்தில்  நடைபெற்றுக் கொண்டிருந்த போது மைதானத்தில் அனாதரவாக கிடந்த பொதியொன்றினை கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் தரம் 10 இல் கல்வி பயிலும் எஸ்.எச்.இஹ்ஸான் கண்டெடுத்துள்ளார்.
கண்டெடுத்து அதனை பிரித்து பார்த்த மாணவன் அப்பொதியினுள் பெரும் தொகை பணம் இருப்பதனை கண்டு எவரிடமும் கூறாமல் நேரடியாக மைதானத்தின் மேடையில் அமர்ந்திருந்த பிரதியமைச்சரிடம் ஒப்படைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து இம்மாணவனின் நல்ல செயலை மேடையில் வைத்தே பாராட்டிய பிரதியமைச்சர் கல்முனை பொலிஸாரின் உதவியுடன் அப் பணத்தினை உரியவரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார்.
கல்முனை ஸாஹிரா தேசியகல்லூரி மாணவர்கள் ஒழுக்கத்தில் மிகவும் நேர்த்தியானவர்கள் இறைவனுக்கு பயந்தவர்கள் என்பதனை இம்மாணவனின் செயற்பாடு எமக்கு உணர்த்தியுள்ளதாக அங்கு சமூகமளித்திருந்த அனைவரும் தெரிவித்தனர்.
இம்மாணவனை பாராட்டி இன்று ( 1 ) இடம்பெற்ற பகுதி வாரியான காலைக்கூட்டத்தில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் உள்ளிட்ட ஆசிரியர்கள் இம்மாணவனை வாழத்தியதுடன் பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.



கட்டாரில் தொழில் புரியும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஈஸ்டன்பேர்ள்ஸ் விளையாட்டுக்கழகம் 7 விக்கட்டுக்களனால் வெற்றிபெற்று 2016 ஆம் ஆண்டுக்கான சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.



( கட்டாரிலிருந்து எம்.ஏ.அக்மல் சிபாக் )
கட்டாரில் தொழில் புரியும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஈஸ்டன்பேர்ள்ஸ் விளையாட்டுக்கழகம் 7 விக்கட்டுக்களனால் வெற்றிபெற்று 2016 ஆம் ஆண்டுக்கான சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
கட்டாரிலுள்ள கல்ஹின்ன நலன்புரி அமைப்பு கட்டார் அல் சாத் மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ( 29 ) ஒழுங்கு செய்திருந்த கட்டாரில் தொழில் புரிவோருக்கிடையிலான கிறிக்கட் சுற்றுப் போட்டியில் 32 அணிகள் பங்கேற்றன.
இறுதிப் போட்டியில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஈஸ்டன்பேர்ள்ஸ் விளையாட்டுக்கழகமும் கட்டார் கிங்ஸ் இலவன் விளையாட்டுக்கழகமும் மோதிக் கொண்டன.
8 ஓவர்கள் கொண்ட மேற்படி சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கட்டார் கிங்ஸ் இலவன் விளையாட்டுக்கழகம் 8 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஈஸ்டன்பேர்ள்ஸ் விளையாட்டுக்கழகம் 6.4 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்று சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டது.
ஈஸ்டன்பேர்ள்ஸ் விளையாட்டுக்கழகத்தின் சார்பில் றியாஸ் ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களையும் , ஹக்கீம் தொடர்ச்சியான 4 சிக்ஸ்ஸர்கள் உட்பட 33 ஓட்டங்களையும் , றிபான் 16 ஓட்டங்களையும் பந்து வீச்சில் ஈஸ்டன்பேர்ள்ஸ் விளையாட்டுக்கழகத்தின் சார்பில் றிஹான் 2 விக்கட்டுக்களையும் ஹமீஸ் , ஆசாத் ஆகியோர் தலா ஒரு விக்கட்டுக்களையும் கைப்பற்றினார்கள்.
போட்டியின் ஆட்ட நாயகனாக ஈஸ்டன்பேர்ள்ஸ் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த றியாஸ் மற்றும் சிறந்த பந்து வீச்சாளராக ஈஸ்டன்பேர்ள்ஸ் விளையாட்டுக்கழகத்தைச் சேரந்த றிஹான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.




Friday, October 9, 2015

சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி மாளிகைக்காடு இக்ரா கல்லூரி மாணவர்கள் ஒழுங்கு செய்திருந்த ஆசிரியர் தின விழா



சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி மாளிகைக்காடு இக்ரா கல்லூரி மாணவர்கள் ஒழுங்கு செய்திருந்த ஆசிரியர் தின விழா இன்று கல்லூரி கேட்போர் கூடத்தில் ஆங்கில ஆசிரியர்  .எச்.அல் - ஜவாஹிர் தலைமையில் இடம்பெற்றது
கல்லூரி அதிபர் எம்..அஸ்வர் பிரதம அதிதியாகவும் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி சிரேஸ்ட ஆசிரியரும்  சாய்ந்தமருது  கோட்ட சுற்றாடல் ஆணையானருமான எம்..எம்.அஸ்ஹர் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் ஆசிரியர்கள் பங்கேற்ற வினோத விளையாட்டு நிகழ்வு மற்றும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றதோடு மாணவர்களுக்கு கல்வியுட்டிய ஆசிரியர்கள் மாணவர்களால் பரிசி வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.









Tuesday, September 29, 2015

சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி கல்முனை வலயத்தில் 3 அதிபர்கள் மற்றும் 9 ஆசிரியர்களுக்கு பிரதீபா பிரபா விருது



கல்முனை கல்வி வலயத்தில் இவ்வருடம் பிரதீபா பிரபா விருது பெறுவதற்கு 03 அதிபர்களும் 09  ஆசிரியர்களும் தெரிவு செய்யப் பட்டுள்ளனர் .
கல்முனை உவெஸ்லி கல்லூரி அதிபர் வே.பிரபாகரன் ,  பாண்டிருப்பு   வித்தியாலய அதிபர் ஜே.டேவிட் ,  மாளிகைக்காடு  அல்-ஹுசைன் வித்தியாலய அதிபர் .எல்.எம்.ஏ.நழீர்  ஆகியோரே  தெரிவு  செய்யப் பட்ட  அதிபர்களாவர் .
இவர்களுக்கான  விருது  வழங்கும்  வைபவம்  சர்வதேச  ஆசிரியர்   தினமான ஒக்டோபர்  06 கொழும்பு பண்டார நாயக்க   சர்வதேச ஞாபகார்த்த  மாநாட்டு மண்டபத்தில் நடை பெறும் வைபவத்தில் வழங்கப் படவுள்ளது .
இவ்வைபவத்தில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , கல்வி அமைச்சர்  கௌரவ அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர் .